ADDED : செப் 12, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
ஏரியூர்;
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் வட்டாரத்துக்கு உட்-பட்ட பல்வேறு கிராமங்களில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்-ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏரியூர் வட்-டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், வட்டார மேற்பார்வையாளர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்-ளிட்ட மருத்துவ பணியாளர்கள் இணைந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேர-ணியை நடத்தினர்.
அப்போது, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் தண்-ணீரை அகற்றுதல், கொசுக்கள் அதிகம் உற்பத்தி-யாகும் பகுதிகளில் புகை மருந்து தெளித்தல் பணி நடந்தது.
