தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தேவாங்கு கடத்தியவர் கைது

தேவாங்கு கடத்தியவர் கைது

தேவாங்கு கடத்தியவர் கைது


ADDED : ஜூன் 05, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்கோடு; திருவண்ணாமலை பகுதியில் இருந்து அரிய வகை மற்றும் அழிந்து வரும் வன உயிரினமான தேவாங்கு கடத்தப்பட்டு, ஜோதிடம், எந்திரம் கட்ட பயன்படுத்துவதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று, பாலக்-கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வனத்துறையினர் கல்கூடப்பட்டி என்ற இடத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்-போது, சந்தேகப்படும்படி டூவீலரில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த கூண்டில் தேவாங்கு ஒன்று இருந்தது. விசார-ணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம், நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த குமரேசன், 50, என தெரிந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்த தேவாங்கை பறிமுதல் செய்து, அதை பாதுகாப்-பாக காப்புக்காட்டில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us