ADDED : மே 27, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றியம் புளியம்பட்டியில் ஏ.ஏ.பி., திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் காளான் விதை தொகுப்பு உற்பத்தி, பி.பள்ளிப்பட்டி ஊராட்சி வாசிகவுண்டனுார் முதல் கும்பாராஹள்ளி வரை செல்லும் நீரோடை குறுக்கே, 2.53 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கேபியன் தடுப்பணை, பையர்நத்தம் ஊராட்சியில், 1.48 லட்சம் ரூபாயில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவது,
பட்டுக்கோனாம்பட்டி ஏரி புனரமைக்கப் படுவதை, மாவட்ட கலெக்டர் சதீஷ் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி திட்ட அலுவலர் அருண்குமார், பி.டி.ஓ.,க்கள் அறிவழகன், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
