/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கார்த்திகையில் மாலையணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
/
கார்த்திகையில் மாலையணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகையில் மாலையணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகையில் மாலையணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED : நவ 17, 2024 01:33 AM
கார்த்திகையில் மாலையணிந்து
விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
தர்மபுரி, நவ. 17-
கார்த்திகை மாத முதல் நாளான நேற்று, தர்மபுரியில் உள்ள பல்வேறு கோவில்களில், ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை துவங்கினர்.
சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், ஆண்டுதோறும் கார்த்திகை மாத துவக்கத்தில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, கார்த்திகை முதல் நாளான நேற்று, தர்மபுரி எஸ்.வி.,ரோடு அபய ஆஞ்சநேயர்கோவில், கந்தசாமி வாத்தியார் தெருவிலுள்ள ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள், குருசாமியிடம் துளசி மாலையணிந்து விரதத்தை துவங்கினர். விரத நேரத்தில் ஐயப்ப பக்தர்கள் அணிய வேண்டிய துணிகள் விற்பனை ஜோராக நடந்தது.