ADDED : ஏப் 30, 2026 03:04 AM

அ நிறம் | அளவு
பெரும்பாலை: பெரும்பாலை அருகே செம்மனுார் கோம்பை திரிபுர சுந்தரி சமேத சோமசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவை-யொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது.
பென்னாகரம் வட்டம், பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட செம்மனுார் கோம்பையில் திரிபுர சுந்தரி சமேத சோமசுந்தரேஸ்-வரர் கோவில் உள்ளது.இது புதுப்பிக்கப்பட்டு நேற்று முன்தினம், சுபமுகூர்த்தக்கால் நடுதல், கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில், மஹாகணபதி வழிபாடு, முளைப்பாலிகை இடுதல், காப்பு அணிதல், யாகசாலையில்
திருவருட்குடங்களை அமர்த்தி, முதல்கால வேள்வி நிறை தீபாரா-தனை நடந்தது.
நேற்று, செம்மனுார் சத்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்-தர்கள் தீர்த்தக்குடம், பம்பை, மேள தாளம் முழுங்க, பெரும்-பாலை வழியாக திரிபுர சுந்தரி சமேத சோம சுந்தரேஸ்வரர் ஆலயம் சென்றடைந்தனர்.
