தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சிங்கார பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

சிங்கார பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

சிங்கார பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : பிப் 06, 2026 10:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 10:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏரியூர்: ஏரியூர் அருகே, சிங்கார பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்தனர்.

ஏரியூர் அருகே உள்ள இராமகொண்டஅள்ளியில் சிங்கார பெருமாள் கோவிலுக்கு இன்று கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதற்காக நேற்று காலை, கணபதி பூஜை உடன் கும்பாபிஷேக பூஜை தொடங்கியது. மதியம் நாகமரை காவிரியாற்றில் இருந்து வான வேடிக்கைகள் முழங்க, மேளதாளங்களுடன் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அவிநாசி ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையிலும், தயானந்த ஆச்சாரியார் முன்னிலையிலும் கும்பாபிஷேக யாக பூஜை தொடங்கியது. இன்று அதிகாலை முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடக்க உள்ளது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சிங்கார பெருமாள் ஆலய கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us