ADDED : டிச 17, 2024 01:39 AM
அரூர், டிச. 17-
அரூர் பகுதியில் மார்கழி மாத பிறப்பையொட்டி, அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜை நடந்தது. அரூர் பழையபேட்டையிலுள்ள கரிய
பெருமாள் கோவில், கடைவீதியிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், மாரியம்மன் தெருவிலுள்ள வாணீஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் மருதிப்பட்டி, கொங்கவேம்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில், கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் வீட்டு வாசலில்
அதிகாலையில் கோலமிட்டு வழிபட்டனர்.
* தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண சுவாமிக்கு நேற்று காலை, 5:30 மணிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள், திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடி கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். இதேபோல், இலக்கியம்பட்டி நித்யகல்யாண பெருமாள் கோவில், கோட்டை பரவாசுதேவ சுவாமி கோவில், செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோவில், மூக்கனுார் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.

