/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மகளிர் தங்கும் 'தோழி விடுதி' கட்டட பணியை டி.ஜி.பி., ஆய்வு
/
மகளிர் தங்கும் 'தோழி விடுதி' கட்டட பணியை டி.ஜி.பி., ஆய்வு
மகளிர் தங்கும் 'தோழி விடுதி' கட்டட பணியை டி.ஜி.பி., ஆய்வு
மகளிர் தங்கும் 'தோழி விடுதி' கட்டட பணியை டி.ஜி.பி., ஆய்வு
ADDED : ஜூலை 15, 2025 01:33 AM
தர்மபுரி, நல்லம்பள்ளியில் பணிபுரியும் மகளிர் தங்கும் 'தோழி விடுதி' கட்டட பணிகளை டி.ஜி.பி., சைலேஸ்குமார் யாதவ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகம் அருகே, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனங்கள் சார்பில், 5.19 கோடி ரூபாய் மதிப்பில், 50 படுக்கையறை வசதிகளுடன் கூடிய, 'தோழி விடுதி' கட்டுமான பணிக்கு கடந்த மே, 21 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கட்டட பணிகள் தொடங்கிய நிலையில், நேற்று காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி., சைலேஸ்குமார் யாதவ் நேரில் ஆய்வு செய்து, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
இதில், தர்மபுரி எஸ்.பி., மகேஸ்குமார், டி.எஸ்.பி., சிவராமன், மாவட்ட சமூக நல அலுவலர் கலாவதி, அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.