sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போதிய மழை இருந்தும் நீர் சேமிப்பு கேள்விக்குறி

/

போதிய மழை இருந்தும் நீர் சேமிப்பு கேள்விக்குறி

போதிய மழை இருந்தும் நீர் சேமிப்பு கேள்விக்குறி

போதிய மழை இருந்தும் நீர் சேமிப்பு கேள்விக்குறி


ADDED : ஆக 24, 2011 12:58 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் போதிய பருவ மழை இருந்த போதும், பாசனத்துக்கு நீர் சேமிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலான விவசாயத்தில் கடந்த சில ஆண்டாய் விவசாயிகளுக்கு போதிய லாபம் இல்லாமல் நஷ்டம் அடைந்து வருவதும், பயிர் கடன்களையும், விவசாய உபகரணங்கள் வாங்க வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீர் ஆதாரங்கள் உள்ள பெரிய விவசாயிகள் மட்டும் விவசாயத்தில் லாபம் அடையும் நிலையும், சிறு விவசாயிகள் நீர் ஆதாரங்களில் நீர் சேமிப்பு கேள்விக்குறியாகி இருப்பதால், தண்ணீர் இல்லாமல் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமலும், உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் வாங்கியுள்ள பயிர் கடன்களை அடைக்க முடியாமல் திணறி வருவதோடு, ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த நீர் சேமிப்பு இன்று நீர் ஆதாரங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு பருவமழைக்காலங்களில் நீர் சேமிக்க முடியாமல் பரிதவிக்கும் நிலையுள்ளது.



மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் 60 சதவீதம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் குறித்து விவசாயிகள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதால், ஆக்கிரமிப்பாளர்கள் எந்த அச்சமும் இன்றி நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை அடிப்படையாக கொண்டு விவசாய பணிகள் நடந்து வருகிறது. தென் மேற்கு பருவ காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையில் சராசரி 209.8 மி.மீ., மழை பெய்யும். தென் மேற்கு பருவ மழைக்காலங்களில் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 69 ஏரிகள் மற்றும் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ஏரிகளும் 40 முதல் 60 சதவீதம் வரையில் நிரம்பும்.



இந்தாண்டு இது வரையில் 190.69 மி.மீ., மழை பெய்த நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் 20 முதல் 30 சதவீதம் மட்டுமே மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நீரும் கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த மழையின் போது, அந்தந்த பகுதியில் பெய்த மழை நீர் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் அனைத்தும் நகரப்பகுதியில் உள்ள கழிவு நீர் கலக்கும் இடமாக மாறிப்போய் உள்ளது. இதனால், பாசனத்துக்கு தேவையான நீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்தாண்டு ஆடிப்பட்ட சாகுபடி கூட கடந்த வாரம் பெய்த மழைக்கு பின்னரே மானாவாரி நிலங்களில் சாகுபடி பணிகள் துவங்கியது. ஆண்டுதோறும் மாவட்டத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை பெய்த போதும், நீர் சேமிப்பு கேள்விக்குறியாகி விவசாயிகள் பாசன நீருக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நீர் ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிரடி நடவடிக்கையில் இறங்குவதோடு, பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், கடந்த காலங்களை போல் மாவட்டத்தில் விவசாய தொழில் சிறப்படையும்.










      Dinamalar
      Follow us