sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிறுபான்மையினர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

/

சிறுபான்மையினர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

சிறுபான்மையினர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

சிறுபான்மையினர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஆக 24, 2011 12:58 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை: கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவியிர்களுக்கு கல்விக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆஸாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மதங்களை சேர்ந்த ப்ளஸ் 1 பயிலும் மாணவியர்களுக்கு மத்திய அரசின் மவுலான ஆஸாத் கல்வி அமைப்பு மூலம் 12,000 ரூபாய் கல்வி உதவித்தொகை இரு தவணையாக வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையில் கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழு பொருட்கள் மற்றும் உண்டி உறையுள்ள கட்டணங்களும் அடங்கும். நம் மாநிலத்தில் 767 கல்வி உதவித்தொகைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவியர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று நடப்பாண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ப்ளஸ் 1 வகுப்பு பயில்பவராக இருத்தல் வேண்டும்.



சேர்க்கை அனுமதி சீட்டு கடிதம் நகல் இணைத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் அனைத்து வழிகளிலும் ஒரு லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். வருமான சான்று, ஓய்வூதிய ஆணை 20 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் அவசியம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

மாணவியர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பகுதியில் உள்ள கல்வி நிலையத்தில் வழங்கிட வேண்டும். கல்வி நிலைய தலைமையாசிரியர், தாளாளர், தங்கள் கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை சரி பார்த்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்படிவம் மற்றும் பிற்சேர்க்கை ஒன்று மற்றும்இரண்டில் குறிப்பிட்ட படிவங்களுடன், 'செயலாளர், மவுலான ஆஸாத் கல்வி அக்கட்டளை, டில்லி 110 055 என்ற முகவரிக்கு வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.










      Dinamalar
      Follow us