தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி மாவட்ட தி.மு.க., வேட்பாளர் விபரம்பாப்பிரெட்டிப்பட்டி

தர்மபுரி மாவட்ட தி.மு.க., வேட்பாளர் விபரம்பாப்பிரெட்டிப்பட்டி

தர்மபுரி மாவட்ட தி.மு.க., வேட்பாளர் விபரம்பாப்பிரெட்டிப்பட்டி


ADDED : மார் 29, 2026 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.பழனியப்பன்

வயது : 65

படிப்பு : எம்.எஸ்.சி., பி.எச்.டி.,

ஜாதி : கொங்கு வேளாளர்

கவுண்டர்

தொழில் : முழுநேர அரசியல்

குடும்பம் : மனைவி, மகன், மகள்

அரசியல் அனுபவம்: 1996 - 2001 வரை, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், 2001 - 2006 மொரப்பூர் எம்.எல்.ஏ., (அ.தி.மு.க), 2011 -- 2016 வரை பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ., (அ.தி.மு.க) தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர். 2012-2016 அ.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர். 2016 - 2018 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ., (அ.தி.மு.க). 2022 முதல், தற்போது வரை தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர்.

கிடைத்தது எப்படி: கட்சியின் மாவட்ட செயலாளர் என்பதால், தீவிர கட்சி பணியாற்றியது. ஏற்கனவே மூன்று முறை

எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் பதவி வகித்தவர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். எதிர்ப்புகள் பெரிய அளவில் இல்லை. அனைத்து சமுதாய மக்களிடமும் நன்கு பழகக்கூடியவர்.

அரூர் (தனி)

பெயர் : அ.சண்முகம்

வயது : 62

படிப்பு : பி.எஸ்.சி.,

தொழில் : விவசாயம்

குடும்பம் : மனைவி சரளா,

மகன் அமிர்தராஜ்

ஜாதி : ஆதி திராவிடர்

சொந்த ஊர் :பொய்யப்பட்டி, அரூர்.

அரசியல் அனுபவம்: 1990 முதல், தி.மு.க., உறுப்பினர், கிளை செயலர், ஒன்றிய பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள். 2006 - 2011, மற்றும், 2011 - 2016 வரை தீர்த்தமலை பஞ்., தலைவர், தற்போது, தர்மபுரி கிழக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்.

கிடைத்தது எப்படி: தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.,யுமான மணியிடம் நெருக்கமாகி அவர் மூலம், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், வடக்கு மண்டல பொறுப்பாளர் அமைச்சர் வேலு ஆகியோரது பரிந்துரையில், 'சீட்' பெற்றுள்ளார்.

பாலக்கோடு

பெயர் : செந்தில்குமார்

வயது : 49

படிப்பு : எம்.டி.,

தொழில் : மருத்துவம் மற்றும் அரசியல்வாதி

ஜாதி : ஹிந்து, வன்னியர்

குடும்பம் : மனைவி ஷோபனா, மகன் ஷிவிதன், மகள் ஷ்வினிதா

அரசியல் அனுபவம்: இவரது தாத்தா வடிவேல் கவுண்டர் காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். 2016 முதல் தர்மபுரி மாவட்ட, தி.மு.க., வில் கட்சி பணி, 2019ல் தர்மபுரி லோக்சபா தொகுதி எம்.பி., மாநில அயலக அணி இணை செயலாளர், தற்போது, பாலக்கோடு தொகுதி, தி.மு.க., வேட்பாளர்.

கிடைத்தது எப்படி: லோக்சபாவில் எம்.பி.,யாக இருந்த போது தீவிர, பா.ஜ., எதிர்ப்பு. பா.ம.க., எதிர்ப்பிலும் தீவிரம் காட்டுபவர். மாற்றுக்கட்சி

யினரிடம் விலைபோக வாய்ப்பில்லை என, கட்சி தலைமை நம்புகிறது. துணை முதல்வர்

உதயநிதியின் நேரடி ஆதரவை பெற்றவர்.

தே.மு.தி.க., வேட்பாளர் விபரம்

தர்மபுரி

பெயர் : இளங்கோவன்

வயது : 76

படிப்பு : எம்.பி.பி.எஸ்.,

தொழில் : மருத்துவர் மற்றும் அரசியல்வாதி

ஜாதி : ஹிந்து, பிள்ளை

குடும்பம் : மனைவி மருத்துவர் கலாவள்ளி, மகள் தேவிஸ்ரீ, மகன் மருத்துவர் மோகனசெந்தில்.

அரசியல் அனுபவம்: தர்மபுரி மாவட்ட செயலாளர், மாநில அவைத்தலைவர். 2014ல் தர்மபுரி சட்டசபை தொகுதியில் போட்டி, 2009 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில் போட்டி. தற்போது, தர்மபுரி தொகுதி வேட்பாளர்.

கிடைத்தது எப்படி: 2006ல், தே.மு.தி.க., தொடங்கியபோது, மாவட்ட செயலாளராக இருந்தார். தொடர்ந்து, பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வயதாகி விட்டதால் இந்த தேர்தலில் கடைசியாக போட்டியிட வேண்டி, கட்சி தலைமையில் உள்ள செல்வாக்கால்,

நேரடியாக பேசி, 'சீட்' பெற்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us