/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., மனுத்தாக்கல்
/
ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., மனுத்தாக்கல்
ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., மனுத்தாக்கல்
ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., மனுத்தாக்கல்
ADDED : செப் 27, 2011 12:09 AM
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் லெட்சுமி காந்தம் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஜெயங்கொண்டம் பஞ்.,யூனியன் அருகிலிருந்து துவங்கிய வேட்பு மனு தாக்கலுக்கான பேரணிக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் துரை மணிவேல் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் முன்னிலை வகித்தனர்.
அங்குள்ள எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் மற்றும் பஸ் ஸ்டேண்டு அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றது. அங்கு நகராட்சி நிர்வாக அலுவலரும் தேர்தல் அதிகாரியுமான புகழேந்தியிடம், ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் பதவிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் லெட்சுமி காந்தம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக ஆனந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரணி மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில், அ.தி.மு.க., ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தவசீலன், வக்கீல் ஜெயராமலிங்கம், தங்க பிச்சைமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ஜெயங்கொண்டம் சிவ கனகசபை, ஆண்டிமடம் கவிதா ராஜேந்திரன், நிர்வாகிகள் ஜெகன், சுப்ரமணியன், செல்வி, மனோகரன், தண்டபாணி, பாவேந்தன், நேஷனல் நாகராஜன், விஜயன், அரங்கநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.