/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட புதிய பொறுப்பாளருக்கு வரவேற்பு
/
தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட புதிய பொறுப்பாளருக்கு வரவேற்பு
தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட புதிய பொறுப்பாளருக்கு வரவேற்பு
தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட புதிய பொறுப்பாளருக்கு வரவேற்பு
ADDED : மார் 24, 2025 07:10 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தி.மு.க., கிழக்கு மாவட்ட புதிய பொறுப்பாளராக தர்மபுரி, எம்.பி., மணி நியமிக்கப்பட்டார். அவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி உட்பட, தி.மு.க., தலைவர்களை சந்தித்த பின், நேற்று தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தபோது, கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தர்மபுரி டவுனிலுள்ள அண்ணாதுரை, அம்பேத்கர், ஈ.வே.ரா., சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். முன்னதாக, தர்மபுரி நகருக்கு வந்த அவருக்கு, நகர எல்லையான அவ்வை வழியில் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில், முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகராட்சி சேர்மன் லட்சுமி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் செந்தில்குமார், மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகர ஒன்றிய நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள், தி.மு.க., தொண்டர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.