/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீட் தேர்வில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு மாநில அளவில் தர்மபுரி 2ம் இடம்
/
நீட் தேர்வில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு மாநில அளவில் தர்மபுரி 2ம் இடம்
நீட் தேர்வில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு மாநில அளவில் தர்மபுரி 2ம் இடம்
நீட் தேர்வில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு மாநில அளவில் தர்மபுரி 2ம் இடம்
ADDED : நவ 21, 2024 01:43 AM
தர்மபுரி, நவ. 21-
அரசு பள்ளியில் படித்து, நீட் தேர்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம், மருத்துவம் மற்றும் இதர படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையில், தர்மபுரி மாவட்டம், மாநில அளவில், 2ம் இடம் பிடித்துள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எம்.பி.பி.எஸ்., கனவை நனவாக்கும் வகையில், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் பழனிசாமி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தார். அதன்படி, கடந்த, 2021 - 2022ல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 17 பேர் எம்.பி.பி.எஸ்., படிக்கவும், 6 பேர் பி.டி.எஸ்., படிக்கவும், 32 பேர் வேளாண் கல்லுாரியிலும் சேர்ந்தனர். 2022 - 2023ல் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, 46 எனவும், பி.டி.எஸ்., 11 ஆகவும் உயர்ந்தது. நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 58, பி.டி.எஸ்., 17 அதிகரித்தது. நடப்பாண்டு நீட் தேர்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தர்மபுரி மாவட்டம் மாநில அளவில், 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மேலும், நடப்பு கல்வியாண்டில், 47 பேர் சித்தா, ஆயுர்வேத கல்லுாரிகளிலும், 184 பேர் வேளாண் கல்லுாரிகளிலும் சேர்ந்துள்ளனர். இருவர் ஜே.இ.இ., மற்றும் ஐ.ஐ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பாடம், பாடம் நடத்திய ஆசிரியர்களை, தர்மபுரி சி.இ.ஓ., ஜோதிசந்திரா பாராட்டு தெரிவித்தார்.

