/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விஜயகாந்த் பிறந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
/
விஜயகாந்த் பிறந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED : ஆக 29, 2011 11:42 PM
தர்மபுரி: பொ.நடூர், திப்பிரெட்டிஹள்ளி, பத்திரெட்டிபட்டி, சுரக்காப்பட்டி, சந்தனூர் மேடு, கொண்டகரஹள்ளி, கெப்பகரை, சிக்கம்பட்டி, மணிபுரம் ஆகிய இடங்களில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு, பேனா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சத்யகுமார் தலைமை வகித்தார். தர்மபுரி ஒன்றிய செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் தண்டா கிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காமதேஸ், குமரவேல், தங்கம் (எ) தங்கதுரை, பொம்மிடி பேரூர் செயலாளர் ஜல.தங்கதுரை, பாப்பிரெட்டிபட்டி பேரூர் செயலாளர், டி.என்.எஸ்.டி.சி., தொழிற்சங்கம், நிர்வாகிகள் முனியப்பன், முருகேசன், ஒன்றிய தொண்டரணி துணை செயலாளர் சேகர், ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் பழனி, கிளை நிர்வாகி பரமானந்தம், ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.