sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி சிலவரி செய்திகள்

/

தர்மபுரி சிலவரி செய்திகள்

தர்மபுரி சிலவரி செய்திகள்

தர்மபுரி சிலவரி செய்திகள்


ADDED : மே 05, 2024 03:31 AM

Google News

ADDED : மே 05, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரியில் வெப்பத்தை

தணித்த திடீர் மழை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில், கடந்த, 2ல் மாரண்டஹள்ளி, பாலக்கோடு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று டன் ஆலங்கட்டி மழை பெய்தது. பாலக்கோடு பகுதியில், 11.4 மி.மீ., மாரண்டஹள்ளியில், 9 மி.மீ., தர்மபுரியில், 3 மி.மீ., அளவிற்கு மழை பெய்தது. மாவட்டத்தின் ஒட்டு மொத் தமாக சராசரியாக, 2.6 மி.மீ., மழை பதிவானது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து, வெப்பநிலை அதிகளவில் நீடித்து வந்தது. இதில் நேற்று, 106.1 பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவான நிலையில், மாலை, 5:45 மணிக்கு திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. தர்மபுரி நகர பகுதி, நல்லம்பள்ளி, அதகபாடி, இண்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரை மணி நேரம் பெய்த கன மழையால், வெப்பநிலை குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தீபாவளி சீட்டு நடத்தி

ஏமாற்றியவர்கள் கைது

தர்மபுரி-

தர்மபுரி அடுத்த பிடமனேரி, மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தனம், 60, அதே பகுதியில் உள்ள தனியார் நிப்பெட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், குமாரசாமிபேட்டையை சேர்ந்த கண்ணன், தேவி, புவனேஸ்வரி ஆகியோர் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர். இதில் தனம் மற்றும் அவரது உறவினர்கள் மாதம், 600 வீதம், 12 மாதங்கள் சீட்டு கட்டியுள்ளனர். மொத்தமாக அனைவரிடமும் வாங்கிய, 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 600 ரூபாய் திருப்பி தரவில்லை என, தர்மபுரி டவுன் போலீசில் தனம் புகார் அளித்தார். புகார் படி, சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து

விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொபட் திருட்டு

போலீசார் விசாரணை

பாப்பாரப்பட்டி, மே 5-

தர்மபுரி மாவட்டம், பால்வாடி அடுத்த மொளப்பனம்பட்டியை சேர்ந்தவர் பிரதாப், 26; இவர் பெங்களூரூவில் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 17 அன்று அவருடைய ஹோண்டா டியோ மொபட்டை, வீட்டின் முன், நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த

போது, மொபட்டை காணவில்லை.

பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

காய்ந்து வரும் தென்னை

விவசாயிகள் வேதனை

தர்மபுரி-

தர்மபுரி மாவட்டத்தில், காய்ந்து வரும் தென்னை மரங்களால் விவசாயிகள் கவலை

யடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், மழையை நம்பி தென்னை, முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த தென்னை, வாழை மரங்கள் சரிந்து வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட வாழை, தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறந்தவெளி போல்வெல்லை

மூட கிராம மக்கள் கோரிக்கை

அரூர், மே 5-

அரூர் அடுத்த பெரியபட்டி பஞ்.,க்கு உட்பட்ட மந்திகுளாம்பட்டியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்

பகுதியில் உள்ள, 2 ஆழ்துளை கிணறுகளில் பொருத்தப்பட்ட குழாய்களை பஞ்., நிர்வாகத்தினர் எடுத்து சென்று விட்டனர். தற்போது, அந்த, 2 ஆழ்துளை கிணறுகளும் மூடப்

படாமல் உள்ளது. அதன் அருகில் சிறுவர்,

சிறுமியர் விளையாடுவதால் விபரீத சம்பவம் ஏற்படும் நிலையுள்ளது. இது குறித்து பஞ்., நிர்வாகம் மற்றும் அரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறும் கிராம மக்கள், திறந்த நிலையில் உள்ள, ஆழ்துளை கிணறுகளை மூட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

அரூர்: அரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில், நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் பழனியப்பன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி பழங்களை வழங்கினார். இதே போல் தீர்த்தமலை, அரூர் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை பழனியப்பன் திறந்து வைத்தார். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us