sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி சிலவரி செய்திகள்

/

தர்மபுரி சிலவரி செய்திகள்

தர்மபுரி சிலவரி செய்திகள்

தர்மபுரி சிலவரி செய்திகள்


ADDED : ஜூன் 27, 2024 04:16 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2 நாட்கள் ஜமாபந்தி

820 மனுக்கள் வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) நர்மதா தலைமையில் நேற்று முன்தினம் ஜமாபந்தி தொடங்கியது. நேற்று பொம்மிடி உள்வட்டத்திலுள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சி, பொம்மிடி, பையர்நத்தம், பி.பள்ளிப்பட்டி, மோளையானுார், மெணசி, ஆலாபுரம், ரேகடஹள்ளி, மோட்டாங்குறிச்சி, கேத்துரெட்டிப்பட்டி ஆகிய வருவாய் கிராமத்திற்கான

தீர்வாயம் நடந்தது.

இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட, 470 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. நேற்று முன்தினம் பாப்பிரெட்டிப்பட்டி உள்வட்டத்தில், 350 மனுக்கள் வரப்பெற்றன. இதன் மீது உரிய நடவடிக்கை காண உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து வி.ஏ.ஓ.,க்கள் பராமரித்து வரும் பதிவேடுகள், நில அளவை கருவிகள், உள்ளிட்டவற்றை உதவி ஆணையர் நர்மதா ஆய்வு செய்தார். இதில் தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஞானபாரதி, ஆர்.ஐ., விமல் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் குறைதீர் முகாம்

தர்மபுரி, ஜூன் 27-

தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நேற்று குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் பெறப்பட்ட, 87 மனுக்கள் மீதான பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டது. இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், பார்த்திபன், எஸ்.ஐ., செல்வராஜ், குப்புசாமி, பரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிராம முன்னேற்றக்குழு பயிற்சி-நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி வட்டார வேளாண் துறை- அட்மா திட்டத்தில், நாகர்கூடலில், வேளாண் உதவி இயக்குனர் சரோஜா, கிராம முன்னேற்ற குழுவின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் பஞ்., தலைவர் குமார் மற்றும் துணைத்தலைவர் சென்னகேசவி ஆகியோர் பேசினர். மேலும், துணை வேளாண் அலுவலர் ராஜேந்திரன் காரீப் பருவத்திற்கான பயிர் சாகுபடி தொழிநுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, உதவி வேளாண் அலுவலர் ரவிசங்கர் வேளாண் துறை மானிய திட்டங்கள் குறித்து, விரிவாக விளக்கமளித்தார். இதில், தோட்டக்கலை அலுவலர் ரோஜா, உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திக் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர். வட்டார தொழில் நுட்ப மேலாளார் சிவசங்கரி உழவன் செயலி செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். பயிற்சி ஏற்பாட்டை அட்மா திட்ட பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கபிலன் ஆகியோர்

செய்திருந்தனர்.

கிராவல் மண் கடத்தியடிப்பர் பறிமுதல்

தர்மபுரி: காரிமங்கலம் ஆர்.ஐ., அருண்குமார் நேற்று முன்தினம், காரிமங்கலம் பகுதியிலுள்ள திருமண மண்டபம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியை சோதனை செய்தார். அதில், 2 யூனிட் கிராவல் மண், உரிய அனுமதி பெறாமல் கொண்டு சென்றது தெரிய வந்தது. அதில், ஓட்டுனர் இல்லாததால், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, போலீசில் புகார் அளித்தார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நில தகராறில் தாக்குதல்

விவசாயி கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 27---

கடத்துார் அடுத்த தேக்கல்நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 35, விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி, 63, என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த, 24ல் காலை கோவிந்தசாமி, ஊர் முக்கியமானவர்களை அழைத்து சென்று, முனுசாமியிடம் நிலம் அளப்பது சம்பந்தமாக பேசினர்.

அப்போது கோவிந்தசாமிக்கும், முனுசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. முனுசாமி,

அவரது மனைவி மேச்சேரி, மகன் எஸ்வந்த், 29, ஆகியோர் கோவிந்தசாமியை கையால் அடித்து, கடப்பாரையால் தாக்கியதில் காய

மடைந்தார். அவர் புகார் படி, கடத்துார் போலீசார் எஸ்வந்தை கைது செய்தனர்.

ரூ.43 லட்சத்துக்குமாடுகள் விற்பனை

அரூர்: அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 230 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 46,000 முதல், 68,000 ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 6,000 முதல், 32,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், 43 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us