/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : நவ 01, 2025 12:56 AM
காரிமங்கலம், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க செயற்குழு கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு, காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். தொகுதி பார்வையாளர்கள், நரேஷ்குமார், அரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசினார். கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கடந்த, 28ல் மாமல்லபுரத்தில் நடந்த, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சி கூட்டத்தில் வழங்கிய ஆலோசனை; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வரும், 4 முதல் நடைமுறைப்படுத்துவது; துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை, எளியோரின் எழுச்சி நாளாக கொண்டாடுவது குறித்து பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.