தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வெவ்வேறு விபத்துக்கள்: 3 பேர் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்துக்கள்: 3 பேர் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்துக்கள்: 3 பேர் உயிரிழப்பு


ADDED : பிப் 17, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி; பாலக்கோடு அடுத்த காணுார்கொட்டாயை சேர்ந்-தவர் கனகராஜ், 43. இளநீர் வியாபாரி. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு சந்திராபுரம் முருகன் என்பவரது தென்னந்தோப்பில், தென்னை மரத்தில் ஏறி, இளநீர் வெட்டி விட்டு கீழே இறங்கும்போது கீழே விழுந்ததில் படுகாய-மடைந்து உயிரிழந்தார்.

பாலக்கோடு அடுத்த வேடம்பட்டியை சேர்ந்தவர் பைரி, 75, மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு வேடம்பட்டி - கிட்டம்பட்டி சாலையில், நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். மேற்கண்ட இருசம்பவங்கள் குறித்து மாரண்ட -அள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அடுத்த கெட்டூரை சேர்ந்தவர் வேடி-யப்பன். இவர் மனைவி பெரியம்மா, 55. கடந்த, 14ல் இரவு, 7:45 மணிக்கு, தன் உறவினரான அலெக்சாண்டர் என்பவருடன் ஹோண்டா யூனிகான் பைக்கில் எர்ரணஅள்ளி சென்றார். பென்னாகரம் - பாலக்கோடு சாலையில், திரு-மல்வாடி பஸ் நிறுத்தம் வேகத்தடை அருகே வந்தபோது, தடுமாறி பைக்கில் இருந்து விழுந்த பெரியம்மா படுகாயமடைந்து பலியானார். பாப்-பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us