/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உள்ளூர் கேபிள் "டிவி' ஒளிபரப்பு நிறுத்தம்
/
உள்ளூர் கேபிள் "டிவி' ஒளிபரப்பு நிறுத்தம்
ADDED : ஆக 06, 2011 02:27 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் முறையான அனுமதியில்லாமல் இயங்கி வந்த 16 உள்ளூர் கேபிள் 'டிவி' சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளூர் கேபிள் 'டிவி'க்கள் விளம்பர போட்டியில் முறையான அனுமதி பெறாமல் துவக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பி வந்தனர். தமிழக அரசின் திடீர் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் கேபிள் 'டிவி' நிறுவனங்கள் திடீர் ஆய்வு நடத்தப்பட்டு, முறையான ஆவணங்கள் இல்லாத கேபிள் 'டிவி' நிறுவனத்துக்கு சீல் வைப்பு மற்றும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் டி.ஆர்.ஓ., கணேஷ், சப்-கலெக்டர் மரியம்சாதிக் தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அனைத்து உள்ளூர் கேபிள் 'டிவி' நிறுவனங்களை திடீர் ஆய்வு செய்தனர். முறையான ஆவணங்கள் இல்லாததால், 16 கேபிள் 'டிவி'க்களின் ஒளிபரப்பை நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்த உத்தரவிட்டனர்.