/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பல்கலைக்கழக தேர்வில் ஜெயம் கல்லூரி சாதனை
/
பல்கலைக்கழக தேர்வில் ஜெயம் கல்லூரி சாதனை
ADDED : ஆக 06, 2011 02:30 AM
தர்மபுரி: கோவை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பருவத்தேர்வில் தர்மபுரியை அடுத்த நல்லானூர் ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
கோவை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மே மாதம் பருவத்தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், தர்மபுரி அடுத்த நல்லானூர் ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி சல்மா 99 சதவீதம் மதிப்பெண்களும், பாரதி 97 சதவீதம் மதிப்பெண்களும், அஞ்சுகம் பேகம், சுதா ஆகியோர் 96 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றனர். மூன்றாம் ஆண்டு மாணவி தமயந்தி 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றும் சாதனை படைத்துள்ளார். முதலாமாண்டில் மூன்று பேர்களும், இரண்டாம் ஆண்டில் ஒருவரும், மூன்றாம் ஆண்டில் எட்டு பேரும், இறுதியாண்டில் ஆறு பேரும் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளையும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும் கல்லூரி தலைவர் ரமேஷ், அறங்காவலர் பார்வதி ரமேஷ், முதன்மை நிர்வாக அதிகாரி சுகுமாரன், இயக்குனர்கள் வெங்கடேசன், கோபிநாத், கல்லூரி முதல்வர் தொல்காப்பிய அரசு மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.