/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கலெக்டர் ஆய்வு
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 07, 2011 01:46 AM
தர்மபுரி: பென்னாகரம் அடுத்த ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பென்னாகரம் அடுத்த ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் லில்லி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, சுகாதார நிலையத்தில் உள்ள வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் விபரங்களையும், பணியாளர்களின் வருகை பதிவேட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியாளர்கள் பணிக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும் எனவும், பெண் சிசு கொலைகளை தடுக்கவும், இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கும், சுகாதார நிலையத்துக்கு வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளம் வயது திருமணங்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்க வேண்டும் என கேட்டு கொண்டார். சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் இருப்பும் குறித்தும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். கர்ப்பிணி பெண்களுக்கு இலவச உதவிகள், தடுப்பு ஊசிகள் முறையாக போடப்படுவது குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். பின் மத்தளம்பள்ளம் அணைக்கட்டை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோக முறை குறித்தும், குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்த ஆலோசனைகளையும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.