/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீர் சேமிப்பை பாழ்படுத்தும் தைல மரங்கள் :புலிக்கரை ஏரி விவசாயிகள் கலக்கம்
/
நீர் சேமிப்பை பாழ்படுத்தும் தைல மரங்கள் :புலிக்கரை ஏரி விவசாயிகள் கலக்கம்
நீர் சேமிப்பை பாழ்படுத்தும் தைல மரங்கள் :புலிக்கரை ஏரி விவசாயிகள் கலக்கம்
நீர் சேமிப்பை பாழ்படுத்தும் தைல மரங்கள் :புலிக்கரை ஏரி விவசாயிகள் கலக்கம்
ADDED : ஆக 26, 2011 12:57 AM
தர்மபுரி: தர்மபுரியை அருகே உள்ள புலிக்கரை ஏரியில், தைல மரங்கள் இருப்பதால், நீர் சேமிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தைல மரங்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரியை அடுத்துள்ளது புலிக்கரை கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள ஏரியின் மூலம், 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. பஞ்சப்பள்ளி சின்னாறு அணை பகுதியில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் பல்வேறு ஏரிகள் நிரம்பி தாமைர ஏரி, மேக்கனம்பாட்டி ஏரிகள் நிரம்பிய பின் புலிக்கரை ஏரியில் நீர் நிரம்பும். கடந்த ஆறு ஆண்டுக்கு பின் இந்த ஏரி நிரம்பவில்லை. அவ்வப்போது பெய்யும் மழையின் போது, அந்த பகுதியில் வடிந்தோடி வரும் நீர் மட்டுமே சேமிக்கப்பட்டு வருகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் இறவை பாசனத்தை நம்பியுள்ளனர். மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதார பகுதியான இந்த ஏரியில் தைலமரங்கள் நடப்பட்டுள்ளன. இங்கு வளர்ந்திருந்த தைல மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் தைல மரங்கள் நடப்பட்டும், வெட்டபட்ட கிளைகளில் இருந்து புதிதாக மரம் வளர துவங்கியுள்ளது. தைல மரம் (யூகலிப்டஸ்) வேர்கள் ஆழமாக செல்வதால், நிலத்தடியில் உள்ள நீரை மற்ற மரங்களை விட அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டவை. இந்த வகை மரங்கள் நீர் ஆதாரங்களில் வைத்தால், நீர் சேமிப்பு பாதிக்கும் நிலை இருப்பதோடு, அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டத்தை பாழாக்கும்.கடந்த காலங்களில் இந்த மரங்கள் பல பகுதியில் நடப்பட்ட போதும், நீர் ஆதாரங்கள் அதிகம் உள்ள பகுதியில் நடவு செய்வது தவிர்க்கப்பட்டு வந்தது. இருப்பினும் புலிக்கரை ஏரியில், 50க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் நீர் ஆதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது என்று விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஏரிக்கு நீர் வரும் கால்வாய்களை சீர் செய்ய வேண்டும் எனவும், தைல மரங்களை வேருடன் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.