/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.8.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.8.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 19, 2011 12:31 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் உள் நட்டம் ஆண்டிஹள்ளி
கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 8 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்
மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
கலெக்டர் லில்லி தலைமை வகித்தார்.
பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 200 மனுக்கள்
பெறப்பட்டன. 67 பயனாளிகளுக்கு 8 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் லில்லி பேசியதாவது: அரசு அறிவித்துள்ள
இலவச திட்டங்கள் படிப்படியாக அனைத்து மக்களுக்கும் கிடைக்க ஏற்பாடுகள்
செய்யப்படும். நம் மாவட்டம் விவசாயம் சார்ந்த பூமி என்பதால், இங்கு பேசிய
அதிகாரிகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசினர். உழவர்
பாதுகாப்பு திட்டத்தில் உதவி தொகை 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள், விதைகள்
வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதல் விஞ்ஞான முறையில் விவசாயம் செய்ய
விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். தோட்டக்கலை துறையில்
சமீபத்தில் ஆய்வு செய்த போது, நவீன விவசாயம் செய்து குடை மிளகாய் பயிர்
மூலம் மாதம் 75 ஆயிரம் ரூபாய் லாபம் பெற்று வருகின்றனர். இது போன்ற மாற்று
பயிர் திட்டங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும். வேளாண் துறை
அதிகாரிகளும் விவசாயிகளுக்கு இந்த முறைகளை பற்றி விரிவாக விளக்க வேண்டும்.
இது போன்ற மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களுடன் விவசாயிகளும் கலந்து
கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட
இயக்குனர் ரவிச்சந்திரன், வேளாண் இணை இயக்குனர் ராஜன், தனி துணை கலெக்டர்
மோகன்ராஜ், சமூக நலத்துறை (பொ) அலுவலர் அன்பழகன், தோட்டக்கலை துறை துணை
இயக்குனர் கலைசெல்வி, வட்டார வழங்கல் அலுவலர் ராமதுரை முருகன், தாசில்தார்
கமலநாதன், யூனியன் சேர்மன் தமிழ்செல்வி, பஞ்சாயத்து தலைவர் விமலா, மாவட்ட
கவுன்சிலர் ராஜா, விவசாய சங்க தலைவர் சின்னசாமி உட்பட பலர் கலந்து
கொண்டனர்.