/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிலஅபகரிப்பு வழக்கில் பா.ம.க., பிரமுகர் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

ADDED : செப் 19, 2011 12:31 AM
தர்மபுரி: தர்மபுரி பா.ம.க., பெண் பிரமுகர் மற்றும் அவரது கணவர் மீது
அடுத்தடுத்து நிலஅபகரிப்பு வழக்குகளின் கீழ் கைது நடவடிக்கை
தொடர்ந்ததாலும், புதிய நிலஅபகரிப்பு வழக்குகள் இருவர் மீது பதிவானதாலும்,
இருவரையும் கலெக்டர் லில்லி உத்தரவின் பேரில், போலீஸார் குண்டர் சட்டத்தில்
கைது செய்து சிறையில் அடைத்தனர்.தர்மபுரி மாவட்டத்தில், அரசியல்
செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள
நிலங்களை அபகரித்த பா.ம.க., பொருளாளர் ஜெயலட்சுமி மற்றும் அவரது கணவர்
பாலு மீது பொதுமக்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே,
மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள
நிலையில், புதிய நிலஅபகரிப்பு வழக்குகள் பதிவானது. எஸ்.பி., கணேஷ்மூர்த்தி
பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர்
உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலட்சுமி குண்டர் சட்டத்தில் கைது
செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பாலு, சேலம் மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார்.