/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நலத்திட்ட உதவிகளில் தமிழகம் முதலிடம் :உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல்
/
நலத்திட்ட உதவிகளில் தமிழகம் முதலிடம் :உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல்
நலத்திட்ட உதவிகளில் தமிழகம் முதலிடம் :உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல்
நலத்திட்ட உதவிகளில் தமிழகம் முதலிடம் :உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல்
ADDED : செப் 19, 2011 12:31 AM
காரிமங்கலம்: ''ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில்,
தமிழகத்தை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, முதல்வர் மாற்றியுள்ளார்,''
என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பேசினார். காரிமங்கலம் யூனியன் அண்ணாமலை
அள்ளி பஞ்சாயத்தில் தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் லில்லி தலைமை வகித்தார். மாஜி அமைச்சர் எம்.எல்.ஏ., அன்பழகன்,
யூனியன் சேர்மன் சந்திரிகா மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் சத்தியவேணி
முனிராஜ், முன்னாள் பால்வள இயக்குனர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் துரைசாமி வரவேற்றார். உயர்க்கல்வி அமைச்சர்
பழனியப்பன் பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர்
அறிவித்த அனைத்து வாக்குறுதியையும், திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி
வருகிறார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில்
மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை பெண்கள்
திருமணத்திற்காக, 4 கிராம் தங்கத்தாலி வழங்கும் திட்டம் பொதுமக்களிடம்
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், திருமணமாகும் பெண்கள் பட்டப்படிப்பு முடித்திருந்தால், 50
ஆயிரமும், ப்ளஸ் 2, பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு, 25 ஆயிரம்
ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வரால் வழங்கப்பட்ட லேப்டாப்பை
மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும். கறவை மாடு, ஆடுகள் வழங்கும்
திட்டத்துக்காக, தமிழக அரசு, 925 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்மூலம், 60 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, முக்கல்நாயக்கப்பட்டியில், 400 மாணவர்களுக்கு, 6 லட்சத்து 67
ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் திருமண
நிதியுதவி தங்கத்தாலி மற்றும் பழைய தர்மபுரியில் அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் என, ஒரு கோடியே 12 லட்சத்துக்கான நலத்திட்ட
உதவிகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., கணேஷ், திட்ட அலுவலர் ரவிச்சந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, குமார், சி.இ.ஓ., இளங்கோ, டி.இ.ஓ.,
ஆறுமுகம், துணைத்தலைவர் விஜயா ரங்கநாதன், பி.டி.ஓ.,க்கள் சுந்தராம்பாள்,
ஸ்ரீதரன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் வசந்தன், நகர செயலாளர் சங்கர்,
முன்னாள் நகர செயலாளர் ரவி, பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.