ADDED : ஆக 26, 2026 05:55 AM

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற-னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்-கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அரூர் ஒன்றிய தலைவர் காந்தி தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் தமிழ்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்-பாட்டத்தில், அண்டை மாநிலங்களில் வழங்கப்ப-டுவது போல், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்-திர உதவித்தொகை, 6,000 ரூபாயாக உயர்த்தி உடனே வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்-தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போ-ருக்கும் உடனே வழங்க வேண்டும். அனைத்து உதவித்தொகைகளையும் மாற்றுத்திறனாளி துறையின் கீழ் வழங்க வேண்டும் என வலியு-றுத்தி, கோஷங்களை எழுப்பினர்.* பென்னாகரம் தாசில் தார் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க வட்டத்தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கரூரான் பேசினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பட்டம் நடந்தது.
