ADDED : ஜன 07, 2026 06:31 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி-றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய போராட்டம் நடந்தது. வட்ட தலைவர் காந்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் தமிழ்செல்வி, வேலாயுதம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம், நிதி குறைப்பு, வேலை நேரம் அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
* பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த சட்ட நகல் கிழித்தெரியும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வட்ட தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தார். மாநிலக்-குழு உறுப்பினர் கரூரான் கண்டன உரையாற்றினார். இதில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்-றத்தை கண்டித்து, பெயர் மாற்றத்திற்கான சட்ட நகலை கிழித்தெ-ரிந்தனர்.

