ADDED : ஜூலை 02, 2026 01:53 AM

தர்மபுரி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில், நேற்று மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். சங்க நல்லம்பள்ளி வட்ட பொருளாளர் மோகன் தலைமை வகித்தார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது
செய்தனர்.
* அரூர் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்தி-றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், மறியல் போராட்டம் நடந்தது. வட்ட தலைவர் காந்தி தலைமை வகித்தார். போராட்டத்தில், கிராமப்புற பெண்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரை விக்சித் பாரத் வேலை-வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் கிராமின் என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட நகலை எரித்தனர். தொடர்ந்து, சாலை-மறியலில்
ஈடுபட்டனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தமிழ்-செல்வி உள்ளிட்ட, 70 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின் மாலையில்
விடுவித்தனர்.
