ADDED : பிப் 11, 2026 07:04 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி அருகே, இலக்கியம்பட்டியில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் சதீஸ், பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாவட்டத்தில், 3.94 லட்சம் குழந்தைகளுக்கும் மற்றும், 20 முதல், 30வயது வரை உள்ள, ஒரு லட்சம் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என, அவர் தெரிவித்தார்.
இதில், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், நகர் நல அலுவலர் லட்ஷியவர்ணா உட்பட மருத்துவர்கள் உடனிருந்தனர்.
