தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாவட்ட சிலம்பம் போட்டி

மாவட்ட சிலம்பம் போட்டி

மாவட்ட சிலம்பம் போட்டி


ADDED : அக் 22, 2024 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவட்ட சிலம்பம் போட்டி

பாப்பிரெட்டிப்பட்டி, அக். 22---

தர்மபுரி மாவட்ட அளவில், பள்ளி மாணவ, மாணவியருக்கு சிலம்பம் விளையாட்டு போட்டி, கடத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளியில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனர் சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜேந்திரன், பழனி துரை உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

கடத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 13 பேர் கலந்து கொண்டனர். இதில் சூப்பர் சீனியர் பிரிவில் அமிர்தயாழினி, ஓவியா ஆகியோர் முதலிடமும், காவியா, கோபிகா, கீர்த்தி ஆகியோர், 2ம் இடமும் பிடித்தனர். முதலிடம் பிடித்த, இரு மாணவியர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us