ADDED : ஆக 10, 2026 01:44 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான, கோ--கோ போட்டியில் ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
வயது வரம்பு அடிப்ப-டையில் நடந்த இப்போட்டியில், 17 வயதிற்கு உட்பட்ட மாண-வியர் முதலிடமும், 14 மற்றும், 17 வயதுக்கு உட்பட்ட மாண-வர்கள் முதலிடமும், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 2ம் இடமும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், சரண் மற்றும் ஸ்ரீ வர்த்தினி ஆகியோரை, பள்ளியின் தாளாளர் முருகேசன், செய-லாளர் பிரு ஆனந்தபிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும் இப்போட்டியில் முதலிடம் பிடித்து, வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்-ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
