/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாவட்ட அளவிலான 2 நாள் ஹாக்கி போட்டி
/
மாவட்ட அளவிலான 2 நாள் ஹாக்கி போட்டி
ADDED : ஜூலை 07, 2024 05:50 AM
பாலக்கோடு: பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான இரண்டு நாள் ஹாக்கி போட்டி நேற்று தொடங்கி-யது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஹாக்கி கழகம் சார்பில், 17 வயதிற்குட்-பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான, இரண்டு நாள் ஜூனியர் ஹாக்கி போட்டி துவக்க விழா நேற்று நடந்தது. ஹாக்கி கழக இயக்குனர் ரங்கநாதன் தலைமை வகித்தார். போட்டியை விளையாட்டு
அலுவலர் ரகுநாதன் துவக்கி வைத்தார்.
பாலக்கோடு, பேகாரஹள்ளி, நரிப்பள்ளி, பி.அக்ரஹாரம், வெங்-கட்டம்பட்டி, அரூர் உள்ளிட்ட அரசு பள்ளியை சேர்ந்த, 7 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டி நடுவராக கருணாமூர்த்தி, குமரன், பிரபாகரன், குமரன், தெய்வானை, செண்பகவள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். போட்டிக்கு உடற்கல்வி ஆசிரி-யர்கள் முனியப்பன், குமார், பார்த்தீபன், ரவி ஆகியோர் முன்-னிலை வகித்தனர். வெற்றி பெறும் முதல் இரு அணிகளுக்கு கோப்பை, மற்ற அணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.