/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 09, 2024 03:50 AM
தர்மபுரி: தர்மபுரியில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., காயத்ரி தலைமை வகித்தார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது: காரிமங்கலம் அடுத்த திண்டல் பகுதியில் உள்ள, கும்பாரஹள்ளி ஏரிக்கு கே.ஆர்.பி., அணை நீர் வந்து சேராத நிலையில், ஏரிக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாட்லாம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆவின் கொள்முதல் மையங்கள் மூலம், பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் நிறுவனம் தரமான பாலை கொள்முதல் செய்கிறது. ஆனால், ஆவின் நிறுவனம் மூலம், அனுமதி வழங்கப்பட்டு தர்மபுரி மாவட்டத்தில் இயங்கும் ஆவின் கடைகள் பலவற்றில் டீ, காபி தரமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும்.இவ்வாறு பேசினர்.
இதற்கு பதிலளித்து பேசிய, ஆர்.டி.ஓ., காயத்ரி, 'கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.