ADDED : பிப் 19, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி அருகே செந்தில் நகரில், வேளாண்துறை சார்பாக நேற்று, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சதீஸ் கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பேசினார்.
இதில், தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பழனிசாமி, தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பாத்திமா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
