/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க.,வினருக்கு தீபாவளி பரிசு மழை
/
தி.மு.க.,வினருக்கு தீபாவளி பரிசு மழை
ADDED : அக் 28, 2024 04:10 AM
அரூர்: தர்மபுரி மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசாக, பண முடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தீபாவளியை குதுாகலமாக கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை சார்பில், பணமுடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிளை மற்றும் வார்டு செயலாளர்களுக்கு, 2,000 ரூபாய்; மாவட்ட அமைப்பாளர்களுக்கு, 5,000 ரூபாய்; நகர செயலாளர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய்; ஒன்றிய செயலாளர்க-ளுக்கு, 1.50 லட்சம் ரூபாய் என, மாவட்டம் முழுவதுமுள்ள நிர்-வாகிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இத்தொகை சில நாட்களுக்கு முன்பே, நிர்வாகிகளை சென்ற-டைந்து விட்டது. இதில், கிளை செயலாளர்களுக்கு வழங்கப்பட்-டுள்ள தொகை மிகவும் குறைவானது, அவர்கள், அதை கிளையி-லுள்ள பொறுப்பாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். அதன்-படி, ஒவ்வொருவருக்கும் தலா, 200 ரூபாய் தான் கிடைக்கும். இதனால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், ஒன்-றிய, நகர செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை மிகவும் அதிகமானது. அவர்கள் டிரான்ஸ்பர், போஸ்டிங் மற்றும் ஒப்பந்த பணிகளில் பல லட்சம் ரூபாய் பணம் பார்த்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.