ADDED : பிப் 13, 2026 07:57 AM

அ நிறம் | அளவு
* தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.,யுமான மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மொரப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் தலைமை வகித்தார். பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
* தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் பென்னாகரத்தில் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
* பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் முன், தி.மு.க., மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் சத்யமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
