/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியல 'வாட்ஸாப்'பில் தி.மு.க., நிர்வாகி புலம்பல்
/
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியல 'வாட்ஸாப்'பில் தி.மு.க., நிர்வாகி புலம்பல்
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியல 'வாட்ஸாப்'பில் தி.மு.க., நிர்வாகி புலம்பல்
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியல 'வாட்ஸாப்'பில் தி.மு.க., நிர்வாகி புலம்பல்
ADDED : மார் 12, 2026 06:44 AM
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி
அருகே, மானியதஹள்ளி கிராம பஞ்.,ல் குடிநீர் தட்டுப்பாட்டை கடந்த, 4
மாதங்களாக தீர்க்க முடியவில்லை என, சமூக வலைதளத்தில் தி.மு.க.,
நிர்வாகி புலம்பியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி
ஒன்றியம், மானியதஹள்ளி பஞ்., கடந்த சில மாதங்களுக்கு முன், 2
பஞ்.,களாக பிரிக்கப்பட்-டது. மானியதஹள்ளி பஞ்., 10க்கும் மேற்பட்ட
குக்கிராமங்-களை உள்ளடக்கியது. இங்கு கடந்த, 4 மாதங்களாக குடிநீர்
தட்-டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பஞ்., நிர்வாகத்தில்
பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க-வில்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., மாவட்ட விவசாய அணி
துணை அமைப்-பாளர் செல்வம், 'வாட்ஸாப்' குரூப் ஒன்றில், வெளியிட்டுள்ள
பதிவில் தெரிவித்துள்ளதாவது:
பஞ்.,ல் குடிநீர் தட்டுப்பாடு
குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலகத்-துக்கு சென்று முறையிட்டால்,
அதிகாரிகள் உடனடியாக பஞ்., செயலரிடம் விசாரிக்கின்றனர்.
அவர்கள்
அனைத்து இடங்களிலும் குடிநீர் பற்றாக்குறையின்றி வினியோகம்
செய்யப்பட்டு வருவதாக கூறி, பிரச்னைகளை மூடி மறைத்து விடுகின்றனர்.
ஜருகு வாரச்சந்தைக்கு முன்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு
நிலையத்திற்கு கடந்த, 4 மாதங்களாக தண்ணீர் வினி-யோகம் செய்ய
முடியவில்லை. பஞ்.,ல் பெரும்பாலான இடங்-களில் இதே நிலைதான் உள்ளது.
எனவே, செயல்படாத பஞ்., செயலர்கள், நீங்களாவே 'டிரான்ஸ்பர்'
வாங்கிச்செல்லுங்கள். இல்லையென்றால், மாவட்ட கலெக்டரிடம் சொல்லி
நடவ-டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் பதிவிட்டு உள்ளார்.

