/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'விவசாயிகள், பெண்களுக்கு எப்போதும் துணை நிற்பது தி.மு.க., அரசு தான்'
/
'விவசாயிகள், பெண்களுக்கு எப்போதும் துணை நிற்பது தி.மு.க., அரசு தான்'
'விவசாயிகள், பெண்களுக்கு எப்போதும் துணை நிற்பது தி.மு.க., அரசு தான்'
'விவசாயிகள், பெண்களுக்கு எப்போதும் துணை நிற்பது தி.மு.க., அரசு தான்'
ADDED : நவ 19, 2024 01:43 AM
'விவசாயிகள், பெண்களுக்கு எப்போதும்
துணை நிற்பது தி.மு.க., அரசு தான்'
கிருஷ்ணகிரி, நவ. 19-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பத்தில், 71வது கூட்டுறவு வாரவிழா நடந்தது. தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி தலைமை வகித்தார். இணைப்பதிவாளர் நடராஜன் வரவேற்றார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
விழாவை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் என்றும் துணை நிற்பது தி.மு.க., அரசு. அதன்படி இன்று பயிர்க்கடன், சுயஉதவிக்குழு கடன், வணிக கடன் உள்பட, 544 பேருக்கு, 5.24 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அவர்களின் வாழ்வு மேம்பட, அரசு துணை நிற்கிறது என்பதில், பெருமிதம் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, புதிதாக துவங்கப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை துவக்கியும், கூட்டுறவு வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கூட்டுறவு வங்கி துணை
பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

