/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'பகுதிநேர ஆசிரியர்களுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்'
/
'பகுதிநேர ஆசிரியர்களுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்'
'பகுதிநேர ஆசிரியர்களுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்'
'பகுதிநேர ஆசிரியர்களுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்'
ADDED : டிச 16, 2024 02:38 AM
தர்மபுரி: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்-பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது, பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்த, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்காலம், 4 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
பள்ளிக்கல்வித்துறை மூலமாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில், 2012 முதல் பகுதிநேர ஆசிரியர்களாக, 12,000 பேர், அரசு பள்ளிகளில், 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது, 12,500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
இதில், மே மாதம் ஊதியம் கிடையாது. வருங்கால வைப்புத்-தொகை, மருத்துவ காப்பீடு, பணிக்காலத்தில் இறக்கும் குடும்-பங்களுக்கு நிவாரண நிதி, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்-கொடை உட்பட எந்தவித பணப்பலனும் அரசிடமிருந்து கிடைப்-பது இல்லை. எனவே, அனைவரின் எதிர்காலம் மற்றும் வாழ்வா-தாரம் மேம்பட, பகுதிநேர ஆசிரியர்கள் வேலையை முறைப்ப-டுத்தி, காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேலும், 2016 மற்றும், 2021 சட்டசபை தேர்தலின் போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் என்ற வாக்குறுதி, தி.மு.க., சார்பில் கொடுக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் ஆட்சிக்கு வந்தவுடன், 100வது நாளில் அதை நிறைவேற்றுவேன் என, பகுதிநேர ஆசிரியர்களிடம் தமி-ழக முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி, கன்னியாகுமரி, மயிலாடு
துறையில் சொன்னதை மறந்து விட்டார். எனவே, ஆசிரியர்களை போராட்டத்திற்கு தள்ளாமல், தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி, 181ல் சொன்னபடி, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.