'தர்மபுரி -- மொரப்பூர் ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க.,விற்கு மனசு இல்லை'
'தர்மபுரி -- மொரப்பூர் ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க.,விற்கு மனசு இல்லை'
ADDED : ஏப் 16, 2026 04:48 AM

தர்மபுரி: ''தர்மபுரி -- மொரப்பூர் ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கும், 100 கோடி ரூபாயில், ஒரு பைசாவை கூட, தி.மு.க., அரசு பயன்படுத்தவில்லை,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி, நேற்று நல்லம்பள்ளியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
தர்மபுரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும், பா.ம.க., வேட்-பாளர் சவுமியாவை ஆதரித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, நேற்று மாலை நல்லம்பள்ளியில், 'மாம்பழம்' சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசியதாவது:75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், தர்மபுரி சட்டசபை தொகுதியில் இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ., தேர்வானது இல்லை. முதல்முறையாக
தர்மபுரி சட்டசபை தொகுதிக்கு ஒரு பெண் எம்.எல்.ஏ., வர-வேண்டும். அதற்கு நீங்கள் சவுமியாவை ஓட்டு போட்டு தேர்ந்-தெடுக்க வேண்டும். தமிழக மக்கள் விடுதலை அடைய, இந்த கொடுங்கோல், தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில், சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் சவுமியா வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தர்மபுரி தொகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பு, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பேன் என, சவுமியா இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க., கடந்த, 5 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து துறை
களிலும் தோல்வி அடைந்துள்ளது. எனவே, ஆட்சி மாற்றம்
கட்டாயம் வேண்டும்.
2014ல் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு நான் வெற்றிபெற்று எம்.பி.,யாக இருந்தபோது, தர்மபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டத்திற்கு தேவையான பணிகளை தொடங்கி வைத்தேன். ஆண்டுதோறும் இந்த திட்டத்திற்கு, 100 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்து கொண்டிருக்கிறது. அதில், ஒரு பைசாவை கூட, தி.மு.க., அரசு பயன்படுத்தவில்லை. காவிரி உபரிநீர் திட்டத்தை செயல் படுத்த, தி.மு.க.,விற்கு மனசு கிடையாது. காவிரியிலி-ருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கலாம். தர்மபுரி மாவட்ட மக்கள் கடைசி வரை அடிமை-யாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வேலை செய்ய வேண்டும் இது தான், தி.மு.க.,வின் நிலைபாடு.
தர்மபுரி மாவட்டத்தில், பல பேர் விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு தண்ணீர் இல்லாத காரணத்தால், வெளி மாநிலங்க-ளுக்கு சென்று கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இங்கு தேவையான தண்ணீர் இருந்தால், விவசாயம் செய்து மானம் மரியாதையோடு வாழ்வார்கள். தர்மபுரி மாவட்டத்திற்கு, காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும் என, அ.தி.மு.க., பொதுச்
செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
தேர்தல் வந்தால் மட்டும், தர்மபுரிக்கு முதல்வர் ஸ்டாலின் வருவார். எதையாவது அறிவித்து விட்டு செல்வார். அந்த அறி-விப்புகள் எதுவும் செயல்பாட்டுக்கு வராது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இ.பி.எஸ்., முதல்வராக வந்தால், தர்மபுரியில் சிப்காட் தொழிற்சாலை வரும். இளைஞர்களுக்கு வேலை-வாய்ப்பு கிடைக்கும்.
தி.மு.க.,வினர் போலியான, 8,000 ரூபாய் கூப்பனை அச்சடித்து, பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறார்கள். அதுபோன்று யாரா-வது தர்மபுரி தொகுதியில் வந்து கொடுத்தால், சரி எனக்கு இந்த கூப்பன் வேண்டாம். அதற்கு பதில் ரொக்கமாக, 2,000 ரூபாய் கையில் கொடுங்கள் மீதி, 6,000 ரூபாய் நீங்களே எடுத்து கொள்-ளுங்கள் என கூறினால், ஏமாற்று பேர் வழிகள் ஓடி விடுவார்கள்.
ஜி.கே.மணி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸின் வலது கரம் என, நேற்று தர்மபுரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஜி.கே.மணி என்பவர் ராமதாசின் வலது கரம் இல்லை, ஸ்டாலி-னுடைய வலது கரம். அதேபோல், அவரது மகன் தமிழ்குமரன், உதய நிதியின் வலது கரமாக உள்ளார். எனவே, தி.மு.க.,வின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிவதை தடுக்க, தி.மு.க.,வை துாக்கி-யெறியுங்கள். அ.தி.மு.க., தலைமையிலான என்.டி.ஏ., கூட்ட-ணிக்கு ஓட்டுபோட்டு வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
