sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 25, 2025 08:06 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியும், மாநில அரசின் மீது நிதிச்சு-மையை அதிகரிப்பதாகவும், 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க, மத்திய, பா.ஜ. அரசு முயல்-வதாகவும், அதற்கு, அ.தி.மு.க., துணை போவதா-கவும் கூறி, தி.மு.க., தலைமையிலான மதச்சார்-பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதையொட்டி தர்மபுரியில், தி.மு.க., சார்பில், முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிர-மணி தலைமையில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல், தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஏரியூர் பி.டி.ஓ., அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.

* கிருஷ்ணகிரி, பி.டி.ஓ., அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். வேலம்பட்டி அஞ்சல் அலு-வலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., வர்த்தகரணி மாநில துணை செயலாளர் கே.வி.எஸ்., சீனிவாசன் தலைமை வகித்தார். காவேரிப்பட்டணத்தில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனரணி செயலாளர் செங்குட்டுவன் தலை-மையிலும், மேலும், பர்கூர், ஊத்தங்கரை, போச்-சம்பள்ளி, மத்துார் உள்பட, தி.மு.க., கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட, 13 இடங்களில் ஆர்ப்-பாட்டம் நடந்தது.

* ஓசூரில், ஒன்றிய அலுவலகம் முன், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகர மேயர் சத்யா தலைமையில் ஆர்ப்-பாட்டம் நடந்தது. இதில், துணை மேயர் ஆனந்-தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்-வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், தளி, வேப்பனஹள்ளி, தேன்கனிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us