/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூரில் அமையும் உயர்மட்ட மேம்பாலம் வரைபடத்தை வெளியிட்ட தி.மு.க., - எம்.பி.,

ADDED : பிப் 05, 2024 11:41 AM
தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் அமைக்கவுள்ள, உயர்மட்ட மேம்பால மாதிரி வரை
படத்தை, தர்மபுரி தி.மு.க., -
எம்.பி., தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில், தொடர் சாலை விபத்து நடக்கிறது. இப்பகுதியில் வளைவுகளுடன் சாய்வாக சாலை உள்ளதால், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றன. இதனால், 6.60 கி.மீ., துார சாலை மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் திட்டமிடப்பட்டு, 702 கோடி ரூபாய் செலவில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. மூன்றாண்டுக்குள் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி தொப்பூர் கணவாய் மலைப்பகுதி சாலை, ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும். தற்போதுள்ள தர்மபுரி - சேலம் இடதுப்புற சாலை மேம்பாலத்துடன், குறுகிய வளைவுகளின்றி விரிவாகத்துடன் மூன்று வழிச்சாலையாக அமைக்கப்படும். இத்திட்ட பணிகளுக்காக தர்மபுரி, சேலம் மாவட்டம் மற்றும் வனத்துறை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் உயர்மட்ட மேம்பாலத்தின் மாதிரி வரைபடத்தை தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், தன்னுடைய 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.