/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி கரும்புக்கு ரூ.4,000 வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி கரும்புக்கு ரூ.4,000 வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி கரும்புக்கு ரூ.4,000 வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி கரும்புக்கு ரூ.4,000 வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2024 04:25 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் நடவு செய்த கரும்பை, அரவைக்கு அனுப்-புகின்றனர். கரும்புக்கான அரசின் கொள்முதல் விலை குறை-வாக உள்ளதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி, கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்-பினர் குழந்தை ரவி கூறியதாவது: ஏற்கனவே வறட்சி மற்றும் வேர்ப்புழு தாக்குதலால் கரும்புகள் பாதிக்கப்பட்டு தோட்டத்தில் காய்ந்துள்ளன. இதனால், கரும்புச்சாறு குறைந்து, எடை மற்றும் அதன் தரம் குறைவதுடன், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். மேலும், வெட்டுக்கூலியாக கடந்தாண்டு, டன் ஒன்றுக்கு, 1,600 ரூபாய் வரை வழங்கப்பட்டதுடன், தொழிலா-ளர்கள் சென்று வர, வாடகை வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்-டது. ஆனால், ஆலை நிர்வாகம் கடந்தாண்டு, டன் ஒன்றுக்கு, 3,349 ரூபாய் வழங்கியது. உழவு செய்தல், கரும்பு நடவு, களை எடுத்தல், தோகை எடுதல் உள்ளிட்ட பராமரிப்பு செலவு மற்றும் வெட்டுக்கூலி, மாமூல், உரம், பூச்சிமருந்து ஆகியவற்றின் விலை, ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. ஆனால், கரும்பின் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படவில்லை. இவற்றை கணக்கிட்டால், விவசா-யிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. இதனால் கரும்பு விவசா-யிகள் கவலை அடைந்துள்ளனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என, தேர்தல் நேரத்தில் அறிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே, கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நடப்பாண்-டுக்கான அரவை பருவத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.