/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி நகராட்சியில் நாய் பிடிக்கும் பணி
/
தர்மபுரி நகராட்சியில் நாய் பிடிக்கும் பணி
ADDED : ஜூன் 04, 2025 01:39 AM
தர்மபுரி :தர்மபுரி நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் பொதுமக்களை விரட்டி கடிப்பதோடு, வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது. நாய் துரத்தும்போது, சில வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்திலும் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதனால், நாய்களை பிடிக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, நகராட்சி துாய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் மற்றும் தெரு நாய் பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இணைந்து, தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட், அக்ரஹார தெரு, எஸ்.பி., ரோடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த, 2 நாட்களாக தெரு நாய்களை வலை வைத்து பிடித்து வருகின்றனர். தொடர்ந்து, நாய்க்கடி தடுப்பூசி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, 2 நாட்கள் பராமரித்து, அந்த நாய்களை பிடித்த இடத்திலேயே பாதுகாப்பாக விடுவித்து வருகின்றனர்.