அனுமதியின்றி வெடிமருந்து எடுத்து சென்ற டிரைவர் கைது
அனுமதியின்றி வெடிமருந்து எடுத்து சென்ற டிரைவர் கைது
ADDED : மார் 08, 2026 07:07 AM
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை வனத்துறை சோதனைச் சாவடி அருகே,
கோட்டப்பட்டி எஸ்.எஸ்.ஐ.,கமல-நாதன் மற்றும் போலீசார் நேற்று
முன்தினம், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் தேரோட்டத்தை முன்னிட்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது,
அரூரில் இருந்து வந்த பொலீரோ பிக்கப் வாக-னத்தை சோதனை செய்தனர்.
அதில், 1,200 சிலரி, 200 டெட்ட-னேட்டர்கள், 1,125 மீட்டர் திரி ஆகியவை
இருந்தது.
இது குறித்து வாகன ஓட்டுனரிடம் விசாரித்ததில், அவர்,
திருவண்ணா-மலை மாவட்டம், செங்கம்பட்டுவை சேர்ந்த சிலம்பரசன், 32,
கம்பைநல்லுார் திருமலா வெடிமருந்து கிடங்கிலிருந்து வெடி
மருந்துகள் வாங்கிக் கொண்டு, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலா வெடி
மருந்து கிடங்கிற்கு உரிய அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரிய
வந்தது. இதைய-டுத்து அவரை கைது செய்த போலீசார் பொலீரோ பிக்கப் வாகனம்
மற்றும் அதிலிருந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
