ADDED : ஜன 26, 2025 04:33 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், சந்திராபுரம் வி.ஏ.ஓ., துரைப்பாண்டியன், மாரண்டஹள்ளி வி.ஏ.ஓ., பிரபு ஆகியோர், மது போதையில் பணிக்கு வருவதாக, அப்பகுதியினர் தொடர்ந்து புகார் கூறி வந்-தனர்.
மேலும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தொடர்ந்து புகார் சென்-றது. மாவட்ட கலெக்டர் சாந்தி இது குறித்து விசாரிக்க, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரிக்கு உத்தரவிட்டார். அவர் திடீரென பார்வை-யிட சென்றபோது, சந்திராபுரம் வி.ஏ.ஓ., மதுபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது. மாரண்டஹள்ளிக்கு விசார-ணைக்கு சென்றபோது, வி.ஏ.ஓ., பிரபு மது போதையில் இல்லை. ஆனாலும், அவர் சில பணிகளில் தவறு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வி.ஏ.ஓ., துரைப்பாண்டியன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வி.ஏ.ஓ., பிரபு மீது ஒழுங்கு நட-வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரி-வித்தார்.