/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
/
திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
ADDED : ஏப் 22, 2025 01:37 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பழையபேட்டை தர்மராஜா கோவில் தெருவில், ஏழு கிராமங்களுக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த மகோத்சவ திருவிழா கடந்த, 2ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும், பாகவதர் கோவிந்தராஜின் மகாபாரத சொற்பொழிவும், பொன்னு
சாமியின் இன்னிசை கவிவாசிப்பும் நடந்து வந்தது. அதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த தின்னக்கழனி திருப்பதி நாடகசபா சார்பில், கிருஷ்ணன் பிறப்பு, பாண்டவர் பிறப்பு, சுபத்திரை மாலையிடுதல், சித்திரசேனன் சண்டை, அர்ச்சுனன் தபசு மரம் ஏறுதல், கர்ணன் சண்டை உள்ளிட்ட பல்வேறு இதிகாச மகாபாரத தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள்
நடந்து வந்தது.
இதன் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நேற்று நடந்தது. கோவில் முன்பு, 30 அடி நீள துரியோதனன் உருவ பொம்மையை, மண்ணால் செய்து, அதில் பீமனும், அர்ச்சுனனும் போரிடும் காட்சிகள் நடத்தி, இறுதியில் அர்ச்சுனன் போர் வாளால் துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரவுபதி அம்மனை, துரியோதனன் உடல் மீது வைத்து, சபதம் நிறைவேறும் வகையில், திரவுபதி கூந்தல் முடிக்கும் நிகழ்வும் நடந்தது.
திருநங்கையிடம் ஆண்களும், பெண்களும் துடைப்பத்தால் அடிவாங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, 7 ஊர் நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.