ADDED : மார் 02, 2026 06:37 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி, த.வெ.க., கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமையில் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், மத்திய இணை செயலாளர் கவிதேவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அருண்குமார், கடத்துார் மத்திய ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி நடராஜன் வரவேற்றார்.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் விஜயகாந்த் பேசினார். இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகளின் செயல்பாடுகள், கட்சியின் கொள்கைகள், சின்னம் ஆகியவற்றை மக்களிடம் எவ்வாறு கொண்டு சென்று சேர்ப்பது மற்றும் நிர்வாகிகள் செயல்படுவது, மக்கள் நலனில் ஈடுபடுவது குறித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட மகளிரணி தலைவி திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
