/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரியில் கல்வி விழிப்புணர்வு பயிலரங்கு
/
அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரியில் கல்வி விழிப்புணர்வு பயிலரங்கு
அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரியில் கல்வி விழிப்புணர்வு பயிலரங்கு
அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரியில் கல்வி விழிப்புணர்வு பயிலரங்கு
ADDED : ஜூலை 08, 2025 01:40 AM
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2ம் மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வி விழிப்புணர்வு பயிலரங்கு நடந்தது. கல்லுாரி தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தனபால் வரவேற்றார். பயிலரங்கில், சினிமா நடிகர் தாமு, வெற்றியை நோக்கி என்னும் தலைப்பில் பேசுகையில், ''மாணவ, மாணவியர் காலம் அறிந்து செயல்பட்டால், வெற்றி பெற முடியும். கல்வி மாணவர்களின் உடல், மனதை ஒருமுகப்படுத்துதல், அறிவு, நல்லொழுக்கம் சார்ந்த மதிப்புடன் வளர்க்க உதவுகிறது.
மாணவர்களை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது,'' என்றார்.தொடர்ந்து, கடந்தாண்டு சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டன. உயிர் தொழில் நுட்பவியல் துறை தலைவி கிருத்திகா  நன்றி கூறினார்.

